வருமானவரிதுறையினர் சோதனை நடத்தியத்தில் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் வேலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது திமுக . பொருளாளர் துரைமுருகன் பணமென்றும் , அவரின் நெருங்கிய நண்பருடைய சிமெண்ட் தொழிற்சாலை என்றும் தகவல் வெளியாகியது. கட்டு கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றி சென்ற வருமான வரித்துறையினர் இது வரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லலை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் கூறுகையில் , சோதனை என்ற பெயரில் கடந்த 3 நாட்கள் எங்களது தேர்தல் பணிகளை தடுத்து விட்டனர். வருமான வரித்துறையை வைத்து தடுத்தால் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைத்துள்ளனர். இதற்கு அரசியல் உள்நோக்கத்தால் நடத்தப்பட்ட ரெய்டு. அதிகாரிகள் வந்து என்னிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கேட்டார்கள், எங்களுக்கு இதற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்றோம் சென்று விட்டார்கள் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.