அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனோ தொற்று உள்ளதால் அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர் பழனிச்சாமி என்ற நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிச்செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட்ட அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் நகராட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகம் முழுவதுமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.