மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அரிய வகை மீன் ஒன்று மனிதனின் உதட்டை சாயலாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியாவில் மிகவும் வித்தியாசமான மீன் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ‘டிரிகர்’ என்று பெயர் கொண்ட அந்த மீன் மனிதனின் உதடு மற்றும் பல்லை அச்சாக கொண்டுள்ளது. இந்த மீனின் வாயை பார்க்கும் போது மனித உறுப்பு போலவே உள்ளது. இந்த மீனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் பலர் இந்த மீனுடன், தங்களின் உதட்டு போட்டோவை இணைத்து வைத்து போட்டோ எடுத்து அதை பகிர்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அந்த மீனின் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டு அழகு பார்த்து வருகின்றனர். இந்த வகை டிரிகர் மீன்கள் 40 மாறுபட்ட வகைகளில் இருக்கின்றன. பெரும்பாலும் ஓவல் வடிவம் கொண்டிருக்கும் இந்த அரிய வகை டிரிகர் மீன்கள் எல்லாவற்றிற்கும் உதடு மற்றும் பல் மட்டும் மனிதனைப் போலவே காட்சியளிக்கிறது.