Categories
மாநில செய்திகள்

உடலை தாங்க… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க… உடனே ஆட்டோவில் வைத்து கொண்டு சென்ற நபர்..!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானாவிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உடலை ஆட்டோவில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சில் ஆழ்த்தியது.

இச்சம்பவம் குறித்து  அம்மருத்துவமனையின் டீன் டாக்டர் என் ராவ் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்தவர் மருத்துவமனையில் பணிபுரியும் நபரின் உறவினர் ஆவார். உயிரிழந்தவரின் உடலை தங்களிடம் தரும்படி கேட்டதால்  ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்குமாறு கூறினோம். ஆனால் அதுவரை அவர் காத்திருக்காமல் ஆட்டோவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை எடுத்து சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories

Tech |