Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சில யாரிடமும் இல்லை…. நான் 2 துப்பாக்கி வைத்துள்ளேன்…. ஜெயக்குமார் பேட்டி …!!

நான் உரிமம் பெற்று இரண்டு துப்பாக்கி வைத்துள்ளேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில்,  தமிழக முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நான் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். இன்று முழு ஊரடங்கை மக்கள் முழுவதுமாக பின்பற்றியுள்ளனர். இதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணமாகும். சென்னையில் 200க்கு மேற்பட்ட சோதனைச்சாவடியில்  போலீசார் ஊரடங்கை  கண்காணித்தனர். கொரோனா பரவுதலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவேளை பின்பற்றுவது, வெளியிடங்களுக்கு சென்று வந்தால் குளிப்பது மற்றும் கைகால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுவது போன்ற கட்டுப்பாடுகளை மக்கள் முழுவதுமாக பின்பற்றினாலே கொரோனா முழுவதுமாக ஒலிக்கப்படும்.

சென்னையை மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் இன்று முழு ஊரடங்கு முழுவதுமாக பின்பற்றப்பட்டுள்ளது. திமுக கட்சியானது வன்முறை மற்றும் ஊழலை அடிப்படையாக கொண்டே நடக்கிறது. அவர்களது ஆட்சிக் காலத்தில் பல்வேறு அசம்பாவிதங்களும் நிலப்பறிப்பு ஊழலும் நடந்தது. அதுமட்டுமல்லாமல் தற்போது திமுக கட்சியினர் துப்பாக்கி கலாச்சார வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயலானது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தன்னிடமும் இரு துப்பாக்கிகள் உள்ளன அதற்கு நான் உரிமை வங்கியுள்ளேன். அதிமுக கட்சியில் எவரிடமும் கள்ள துப்பாக்கி இல்லை. திமுக தற்பொழுது ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உள்ளாகும் என அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |