சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் கண்ணியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவன் சதீஷ்குமார்.. வயது 30 ஆகிறது.. கட்டுமானப் பணியாளராக வேலைபார்த்து வரும் இவன், நேற்று இரவு இதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, வலுக்கட்டாயமாக அவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.. இதனால் சிறுமி சத்தம் போடவே, அதனைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.
இதனைப்பார்த்த சதீஷ்குமார் அங்கிருந்து பயத்தில் தப்பியோட முயன்றுள்ளான்.. அப்போது, ரோட்டில் கிடந்த கல் தடுக்கி கீழே விழ, மக்கள் அவனை மடக்கிப்பிடித்து அடித்து நொறுக்கினர். பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், சதீஷ்குமாரை மீட்டு பம்மலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தனர்.
அதனைத்தொடர்ந்து சங்கர் நகர் போலீசார் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சதீஷ்குமாரை ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.