காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று ராகுல் காந்தி வெளியிடுகிறார் .
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் ராகுல் காந்தி வெளியிட இருக்கின்றார்.
இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் , புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது , விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.
மேலும் 5 கோடி ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமான உத்தரவாத திட்டம் , மகளிருக்கு அனைத்து துறைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு உத்தரவாதம் , இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் வழங்குதல் , சிறு வியாபாரிகள் நலன் கருதி பல்வேறு அம்சங்கள் , ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி போன்ற நல்ல திட்டங்களும் இதில் இடம்பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.