பிரிட்டனின் செயல்கள் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக வடகொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகொரியா சிறைகளில் கடுமையான வேலை சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்டதற்கு எதிராக அபராதம் விதிக்க போவதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிம் ஜாங் வுன் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்காவின் கைப்பொம்மையாக உருவாகி வரும் பிரிட்டான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என பதிவு செய்துள்ளனர். வடகொரியாவில் இயங்கி வரும் ஏழு மாநில பாதுகாப்பு பணியகம் மற்றும் இரண்டு மக்கள் அமைப்பு திருத்த பணியகம் மீது பிரிட்டன் அரசு தற்போது நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பிரிட்டானின் புதிய உலகளாவிய மனித உரிமை ஆட்சியின் கீழ் முதல் தடைகளின் ஒரு பகுதி இதுவென கருதப்படுகிறது. வடகொரியாவில் உள்ள இந்த இரு மர்ம குழுக்கள் மீது மட்டுமல்லாமல் ரஷ்யாவில் இயங்கி வரும் இதுபோன்ற மக்கள் மீதும் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வரும் 20 பேர் கொண்ட குழுக்கள் மீதும் தடை விதித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் இத்தகைய நடவடிக்கையானது அமெரிக்காவின் விரோத கொள்கையை ஆதரிப்பதற்காக வடகொரிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் வன்முறை தலையீடு என்று கூறி நமது நாட்டின் பாதுகாப்பிற்கு பயன்படும் பொறுப்பான நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க துணிந்தது நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் மற்றும் இதனை நிராகரிக்கிறோம் என அந்த அறிக்கையில் வடகொரிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சுட்டிக்காட்டி கூறியுள்ளார். இதற்கிடையே வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் அல்லது அந்த நாடு மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் குறித்து காண்பதற்கு வட கொரியாவும் அமெரிக்காவும் தவறவிட்ட நிலையில் இந்த அதிரடி முடிவு ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.