Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையில் இன்று காலை புதிதாக 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1077 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ள நிலையில் 1603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து இன்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது, மதுரையில் செயல்படுத்தப்பட்டு வரும் காய்ச்சல் முகாம் நல்ல பலனை கொடுத்துள்ளது. இதனால் கொரோனா அறிகுறி உள்ள ஏராளமானோர் முன்னதாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்க இந்த ஊரடங்கு பயனுள்ளதாக இருந்தது. இந்த புள்ளி விவரங்களை எல்லாம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஊரடங்கு மேலும்  ஊரடங்கை நீடிக்க பரிந்துரை செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் மதுரையில் மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா ? என்ற சந்தேகம் இருந்துவந்த நிலையில் தற்போது மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்வதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரவை பேரூராட்சி,மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் கிராம ஊராட்சிகளில் முழு முடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிய உள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |