நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாமர மக்கள் முதல் பெரிய பெரிய பிரபலங்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மருத்துவர்களும், முன்கள பணியாளர்களான போலீஸ் போன்றோரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அமிதாப் பச்சனின் மருமகளான பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மக்களுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சினமா பிரபலங்கள் கவலை அடைந்துள்ளனர்.