ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என ரகானே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை தலைவரான அஜிங்யா ரகானே கிரிக்கெட் இணைய தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன். என் உள்ளுணர்வும் சொல்கிறது.ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொருத்தவரை தொடக்கவரிசையோ அல்லது நான்காவது வரிசையோ எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயாராக உள்ளேன். அதற்கு வாய்ப்பு எப்போது வரும் என்பது தெரியவில்லை.
மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதற்கு மனரீதியாக ஆயத்தமாக உள்ளேன். திறமையின் மீது நம்பிக்கை வைத்து நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது முக்கியம்” என்று கூறினார். 32 வயதான ரகானே இதுவரை 90 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார் மேலும் இறுதியாக 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.