மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வந்ததை தொடர்ந்து அங்குள்ள மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டது. இன்றோடு முழு பொதுமுடக்க உத்தரவு நிறைவடைய இருக்கும் நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மாநகரில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சர் தெரிவித்தையடுத்து தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரையில் ஜூலை 15ஆம் தேதி முதல் ஏற்கனவே இருந்த வழக்கமான பொதுமுடக்கம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதாவது ஜூன் 24ஆம் தேதிக்கு முன்னர் இருந்த பொதுமுடக்க நிலை மீண்டும் அமலுக்கு வரும். மேலும், மதுரையில் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாமை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.