13-07-2020, ஆனி 29, திங்கட்கிழமை.
இராகு காலம்- காலை 07.30 -09.00
எம கண்டம்- 10.30 – 12.00
குளிகன்- மதியம் 01.30-03.00
இன்றைய ராசிப்பலன் – 13.07.2020.
மேஷம்
செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ரிஷபம்
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலருக்கு புதிய பொருள் வாங்கும் யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வம்பு, வழக்கு போன்ற விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்
உத்தியோகம் தொடர்பாக அலைச்சல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். நினைத்த காரியம் நிறைவேற அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகலாம். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் ஒரு சில உபாதைகள் தோன்றி மறையும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுபின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் ஈடுபாடு இன்றி செயல்படுவீர்கள். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். திருமண சுப முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்றே குறையும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு
வியாபாரத்தில் நண்பர்களால் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். தெய்வ வழிபாடு நல்லது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட காலதாமதமாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகலாம். தொழில் தொடர்பாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும்.
கும்பம்
வியாபாரம் தொடர்பாக கொடுக்கல் வாங்கலில் சற்று இழுபறியான நிலை உண்டாகும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் நிதானம் தேவை.
மீனம்
வேலையில் புதுப் பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இன்று இருக்கும். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.