கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு இல்லை என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு என செய்தி பரவியது. இதற்க்கு நகராட்சி ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஆணையர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இல்லை. விருதாச்சலத்தில் முழு ஊரடங்கு என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம். விருதாச்சலத்தில் நகராட்சிக்குட்பட்ட ஐந்து முக்கிய வழிகளில் மட்டும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரம் படி 1,510 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, 1067 பேர் குணமடைந்துள்ளனர். 437 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்