Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…சுபவிரயங்கள் அதிகரிக்கும்…பூசல்கள் ஏற்பட்டு நீங்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று முன்னேற்றம் கூடும் நாள் ஆக இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். நோக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தலாம். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டி இருக்கும். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் நட்பு உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும்.

பயணங்கள் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. அக்கம்பக்கத்தினரும் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று காதலர்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.

பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் ஓரளவு நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |