சென்னையை பொறுத்தவரை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாகவே சென்னை மாநகராட்சிக்கு வருகைதந்து, ஆய்வுசெய்து அறிவுரைகளை வழங்கியதன் காரணமாக, குறிப்பாக சென்னை மாவட்டத்தில்… சென்னை மாநகராட்சி முதல்வரின் அறிவுரைகளை ஏற்று, முதலமைச்சர் உத்தரவின் பேரில் பல குழுக்கள் போடப்பட்டது. உயர்மட்ட அதிகாரிகள் குழு, மண்டல வாரியாக அமைச்சர்கள்… எல்லாம் போடப்பட்டு ஒரு களப்பணியை முழுமையாக ஆட்சி வருகின்ற நிலையில் தற்போது கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. கொரோனா பரவலும் வேகமாக குறைந்து வருகிறது, இது ஒரு நல்ல விஷயம். இன்னைக்கு கூட முழு ஊரடங்கு… சென்னையில் பல இடங்களில் சுற்றி பார்த்தேன்… மக்களுடைய ஒரு ஒத்துழைப்பு இருக்கின்றது, நல்ல விஷயம்.
மக்கள் இதனோட முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு நன்றாக தெரிகிறது. பொது இடங்களில் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு நிலை. ஊரடங்கிற்கு நிச்சயமாக நல்ல பலன் கிடைத்துள்ளது. சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மக்களுடைய மனதைப் பொறுத்தவரை சுயக்கட்டுப்பாடு வேணும். அது வந்து ரொம்ப ரொம்ப முக்கியம். எனவே அரசு சொல்லிய கட்டுப்பாடுகளின் கீழ் தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும்.
அரசு சொல்கின்ற மாதிரி முக கவசம் போடணும், கைகளை அடிக்கடி கழுவுதல், வீட்டுக்கு போனா சுத்தமாக குளிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்ற வேண்டும்.இந்த நோய் காற்றின் மூலம் பரவுமா என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தி வருது. எது எப்படி இருந்தாலும் சரி… தும்மும் போதும், இருமும் போதும் சரி தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளி விட்டாலே எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. இப்படி செய்தால் கொரோனா வெகு சீக்கிரம் குறைந்து, காணாமல் போகின்ற ஒரு நிலைமை ஏற்படும்.