இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ.
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,09,448 ஆக இருக்கின்றது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று ஒரு மாவட்டம் விடாமல் 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக:
அரியலூர் – 513
செங்கல்பட்டு – 8,120
சென்னை – 77,338
கோயம்புத்தூர் – 1261
கடலூர் – 1526
தர்மபுரி – 241
திண்டுக்கல் – 787
ஈரோடு – 389
கள்ளக்குறிச்சி – 1791
காஞ்சிபுரம் – 3606
கன்னியாகுமரி – 1306
கரூர் – 201
கிருஷ்ணகிரி – 253
மதுரை – 6078
நாகப்பட்டினம் – 347
நாமக்கல் – 174
நீலகிரி – 183
பெரம்பலூர் – 175
புதுக்கோட்டை – 615
ராமநாதபுரம் – 1849
ராணிப்பேட்டை – 1509
சேலம் – 1867
சிவகங்கை – 862
தென்காசி – 683
தஞ்சாவூர் – 687
தேனி – 1729
திருப்பத்தூர் – 414
திருவள்ளூர் – 6655
திருவண்ணாமலை – 3076
திருவாரூர் – 708
தூத்துக்குடி – 2261
திருநெல்வேலி – 1758
திருப்பூர் – 297
திருச்சி – 1504
வேலூர் – 2772
விழுப்புரம் – 1459
விருதுநகர் – 2073