Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட பாஜக…. நடுங்கும் காங்கிரஸ்…. டெல்லிக்கே ஓடிய துணை முதல்வர் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அதனை தக்க வைக்க முடியாமல் பாஜகவிடம் இழக்கிறது. அதிகமான தொகுதி வென்றாலும், குறைவான தொகுதி வென்ற பாஜகவிடம் பறிகொடுத்து ஆட்சியை பிடிக்க முடியாத அளவிற்கு செல்கிறது. மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து துவண்டு போன காங்கிரஸ்சுக்கு 2018 சற்று ஆறுதல் அளிக்கும் வருடமாக இருந்தது.

image

அந்த ஆண்டில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.இதில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் உள்ளே நடந்த அதிகார போட்டியில் ஒதுக்கப்பட்ட ஜோதிராதித்தய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்து தற்போது அங்கு பாஜக ஆட்சி   நடைபெற்று வருகின்றது. அதே போல தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலமும் சிக்கி கொள்ளும் நிலையில் இருக்கின்றது.

image

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி காரணமாக ஆட்சி எப்போது பறிபோகும் என்ற நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருடன் நேற்று டெல்லி சென்று விட்டார். இதையடுத்து மத்திய பிரதேசத்தில் எப்படி ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தாரோ ? அதேபோன்று சச்சின் பைலட்டும் பாஜகவில் இணைந்து மத்திய பிரதேச  காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பார் என்று பேசப்பட்டது.

Image

இந்த நிலையில் தற்போது சச்சின் பைலட் உடன் டெல்லி சென்ற எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பி கொண்டிருப்பதாக அந்த மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் சச்சின் பைலட்டுடன் ராகுல் காந்தி தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பதாகவும், கூறப்படுகிறது இருந்தாலும்,ராஜஸ்தானில் காங்கிரசு ஆட்சி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யுமா ? என்ற ஐய்யம் எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில ஆதரவாளர்கள் அழைத்துக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பதிவு மூலமாக சச்சின் பைலட்டுக்கு தூது விட்டுள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட் ஓரங்கட்டுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். இது அமித்ஷா பாஜக திட்டம் என்று கூறப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பெயர் தேசிய அளவில் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் ?

Categories

Tech |