கொரோனா கால ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாடங்களை படிக்க ஏதுவாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி சேனல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் இதுகுறித்த முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்புவதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் கண்டு பயனடையலாம் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- TACTV (தமிழ் நாடு அரசு கேபிள்)
- SCV சேனல் 98
- TCCL சேனல் 200
- VK DIGITAL சேனல் 55
- அக்ஷயா கேபிள் சேனல் 17