நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின.
தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் பல பணிகளை தொடங்க தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.
இதனையடுத்து சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்கு வர வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டு இருந்தார். ஜூலை 15ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்க இருப்பதால் இத்தைகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.