நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு திட்டம் , வேலைவாய்ப்பு திட்டம் விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. முன்னதாக வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் துயரங்கள் , பெண்களின் பாதுகாப்பு ஆகியவை இந்தத் தேர்தல்களில் முதலிடம் வகிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும் இது வறுமையை குறைக்கும் திட்டமும் தேர்தல் அறிக்கையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.