தமிழகம் முழுவதும் பல இடங்களில் விதிமீறல் கட்டடங்களுக்கு மின் இணைப்பு , குடிநீர் போன்ற வசதிகள் சட்டத்திற்குப் புறம்பாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல இடங்களில் இருந்து வந்தன. இதனை தடுக்கும் வகையில் தற்போது தமிழக நகராட்சி நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் தமிழகம் முழுவதும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு கட்டடப் பணி நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் என்று நகராட்சி நிர்வாக துறை தெரிவித்துள்ளது. சொத்துவரி சான்றிதழை பணிநிறைவு கால ஆதாரமாக கட்டக் கூடாது என கூறியுள்ள நகராட்சி நிர்வாக துறை விதிமீறல் கட்டடங்களுக்கு மின் இணைப்பு குடிநீர் வசதி உள்ளிட்டவை வழங்குவதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.