Categories
அரசியல் மாநில செய்திகள்

MLAஆனது இப்படி செய்வாங்கனு தெரியும்…. அதான் திமுக அப்படி செஞ்சுருக்கு …. போட்டுடைத்த அமைச்சர் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கள்ளத்துப்பாக்கி வைத்து கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது… 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது, நெறி தவறி நடக்க கூடாது என்று கையெழுத்து வாங்கி பிரச்சாரம் செய்தார்கள், இதனை திமுகவினர் பேப்பரில் கூட போட்டார்கள். ஆனால் இப்போது கட்ட பஞ்சாயத்தை எல்லாம் மீறி துப்பாக்கி துப்பாக்கி சூடுக்கு சென்று உள்ளார்களா ? என்ற கேள்வி எழுப்பிய போது,

எந்த ஒரு கட்சியும் இணைந்து அந்த மாதிரி வாங்குனது கிடையாது. வீட்டை விட்டு வாங்குவது கிடையாது. எங்க கட்சியில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே… வேட்பாளர்களாக நிக்கிறாங்க . நானும் 1991, 96, 98, 2001, 2006, 2011, 2016 இத்தனை முறை வேட்பாளர்களாக என்னை தேர்வு செய்யும் போது, எங்களிடம் எந்த ஒரு ஆவணத்தில் கையெழுத்து வாங்க வில்லை. ஆனால் இவர் வாங்குகிறார் என்றால் … இவனுங்க எல்லாம் கட்ட பஞ்சாயத்து பண்ணுவானுங்க என அப்பா அம்மா எல்லாம் கழித்து பண்ணுவாங்க… இவனுங்க எல்லாம் திருட்டுத்தனம் பண்ணுவாங்க…. அதனால் நாம் முன்னாடி வாங்கி வச்சுப்போம் என்று தான் வாங்கி வச்சு இருக்காங்க.அதை தான் காட்டுது அது.

Categories

Tech |