பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனக்கு நேர்ந்த சோகத்தை வருத்தத்துடன் டூவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினி உலகில் சின்ன கலைவாணர் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விவேக். திரையில் கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியான தாராள பிரபு படத்தில் பார்த்தோம். நடிகர் விவேக் நகைச்சுவையில் சிந்தனையையும் சேர்த்து மக்களுக்கு கொடுப்பவர். மேலும் இவர் ஒரு சமூக நலன் விரும்பி. அப்துல் கலாம் ஐயா தந்த கொள்கைகளை வாழ்க்கையில் எடுத்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறார் இவர் .
தற்போது சமூக வலைதளம் மூலமாக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை அறிவுறுத்தியும் வருகிறார். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ராமு தாத்தா கடந்த 50 ஆண்டுகளாக 10 ரூபாய்-க்கு நிறைவான சாப்பாடு கொடுத்து வந்தார். அத்தகைய ராமு தாத்தா இறந்ததாக செய்திகள் வெளிகியுள்ளது. நடிகர் விவேக்கும் மதுரையை சேர்ந்தவர். என்பதால் ராமு தாத்தாவின் சேவையை பாராட்டி, அவரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
மதுரை ராமு தாத்தா! உங்கள் உடல் மரிக்கலாம்; நீங்கள் போட்ட உணவு செரிக்கலாம்; ஆனால் உங்கள் நினைவு பசியாறியவர் நெஞ்சில் நீங்காமல் நிலைக்கும்!(17 வயதில் வடலூர் வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு வாழ்ந்திருக்கிறார்) pic.twitter.com/p8zI4nTti1
— Vivekh actor (@Actor_Vivek) July 12, 2020