ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்ப்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகிய இருவருக்குமான அதிகார போட்டி முற்றியுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். டெல்லியில் முகாமிட்டு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் ஜெய்ப்பூருக்கு திரும்பிச் சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் சச்சின் பைலட்டுக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு என அசோக் கெலாட் கோஷ்டி சொல்லுகிறது.
பிரச்சனை மிகவும் பெரிய அளவில் இருப்பதற்கு காரணம் என்னவென்றால், அசோக் கெலாட் தலைமையின் கீழ் வேலை செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. எனது தொகுதிக்கான மேம்பாட்டு பணிகளை கூட செய்ய விடாமல் தடுக்கிறார் என சச்சின் பைலட் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். ஆனால் கட்சித் தலைமை இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருக்கின்றார். அதே சமயத்தில் அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கிறார்.
அந்த பதவியில் அவர் நீடிக்கக் கூடாது, தேவைப்பட்டால் அவருக்கு துணை முதல்வர் பதவி உடன் சேர்த்து கூடுதலாக சில துறைகளை கொடுக்கலாம். அவர் மாநில கட்சித் தலைவர் பதவியை விட்டு விட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆகவேதான் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மோதலை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் ? என கட்சித் தலைமை ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்களாக கருதப்படும் கே.சி வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா அஜய் மார்க்கர் உள்ளிட்ட மூன்று தலைவர்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பி இருக்கிறது.
இவர்கள் அசோக் கெலட்டை சந்தித்து மற்ற தலைவர்களிடம் பேசி இந்த பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை தங்கள் பக்கம் இழுத்து பாரதிய ஜனதா அங்கே காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது போல இங்கே சச்சின் பைலட்டை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்த்து விடலாம் என அசோக் கெலாட் உள்ளிட்ட பலரும் அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள்.
குதிரை பேரம் தொடர்ந்து நடந்து வருவதாக சொல்கிறார்கள். ஆகவே சச்சின் பைலட் காங்கிரசை விட்டு வெளியேறி பிஜேபி பக்கம் சென்று விடுவாரா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் டெல்லியில் முகாமிட்டு இருப்பது கட்சி தலைமைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளத