அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் உத்திரபிரதேசம் அசாம் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள காலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி வெள்ளப்பெருக்கால் மிகவும் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், மழைநீர் தேங்கி ஓடுகின்றது.
இந்நிலையில் அசாமில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த நிலையில் கன மழையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்தது. அச்சமயத்தில் அசாமில் உள்ள 23 மாவட்டத்தில் குடிகொண்டுள்ள 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்கவைத்து பாதுகாத்துள்ளார்.