முதல்முறையாக கருப்பினப் பெண் அமெரிக்க கடற்படையில் விமானத்தை இயக்கும் பைலட்டாக தேர்வாகியுள்ளார்.
உலகிலேயே புகழ்பெற்ற விமானப்படையை கொண்ட அமெரிக்கா சென்ற 45 வருடங்களுக்கு முன் ரோஸ்மேரி மெரினர் என்ற பெண்ணை போர் விமானத்தை இயக்குவதற்காக முதன் பெண் பைலைட்டாக தேர்வு செய்தனர்.இதன்மூலமாக அப்பெண் முதல் பெண்போர் விமானி என்ற புகழை பெற்றார்.இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் பர்கே என்ற இடத்தில் உள்ள ஜே.ஜி.மேடலின் ஸ்விக்லே என்ற பெண் அமெரிக்க கடற்படை போர் விமானத்தை இயக்க தேர்வாகியுள்ளார்.
அமெரிக்க கடற்படை பயிற்சி மையத்தில் 2017ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த இவர் அதனை தொடர்ந்து கடற்படை, விமானப்படை மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். கருப்பின பெண்ணான ஜே.ஜி.மெடலின் ஸ்விக்லே-விற்கு இம்மாதத்தின் இறுதியில் கடற்படை போர் விமானத்தை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதாக அமெரிக்க கடற்படையினர் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிவிப்பில் பதிவிட்டுள்ளனர்.