தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் போன்ற அதிகாரிகள் ஈடுபட்டதை தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகளும் பல மட்டத்திலும் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. கொரோனா தடுப்பு பணிகளில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம. தலைமை பண்பு மிக்க ஆசிரியர்கள் பேரிடர் காலங்களில் சேவை ஆற்ற அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்த நீதிமன்றம் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.