Categories
மாநில செய்திகள்

சொகுசுக் கார் வாங்கிய வங்கி தலைமை நிர்வாகி …. உடனடியாக திருப்பிக் கொடுக்க வைத்த பிரதமர் மோடி ..!!

2 ஆடி கார்களை அதிக விலை கொடுத்து வாங்கிய வங்கி தலைமை நிர்வாகியை எச்சரித்து காரை திரும்பக் கொடுக்க செய்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி எத்தகைய வேலையில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை மேலோட்டமாக பார்வையிடுவார். பொதுத்துறை வங்கி கிளையான பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாகி இரண்டு ஆடி சொகுசு கார்களை வாங்கியுள்ள செய்தி அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இவ்வங்கி தான்  கோடிக்கணக்கில் பண மோசடி செய்து ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடிக்கு கடன் கொடுத்தது. இதையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை  உடனடியாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி கொரோனா பரவல் உள்ள நிலையில் அரசின் செலவுகளை எல்லாம் குறைத்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் கோடிக்கணக்கில் வங்கி பணத்தினை செலவழித்து கார் வாங்கியுள்ளார். வங்கி சேர்மன்; என்னதான் நடக்கின்றது? என்ற கேள்வியை பிரதமர் கேட்டார். உடனடியாக வங்கியின் தலைமை நிர்வாகிக்கு தொடர்பு கொண்ட நிதியமைச்சர் தாங்கள் இரண்டு ஆடி கார்களை வாங்கி உள்ளீர்களா என்று கேட்ட கேள்வி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் தங்கள் வேலையை தொடர வேண்டும் என விரும்பினால் அந்த கார்கள் தங்களிடம் இருக்கக் கூடாதென்பது ‘பிரதமரின் ஆணை’ எனக் கூறினார் நிதியமைச்சர். இதனைத்தொடர்ந்து கார்களை திரும்ப கொடுத்து விட்டு நிர்மலா சீதாராமன் இடம் அறிவித்தார் வங்கி நிர்வாகி.  இந்நிகழ்வை தொடர்ந்து அனைத்து பொதுத்துறை வங்கி நிர்வாகிகளும் தேவையற்ற எந்த பொருட்களையும் அதிகமான விலையுடன் வாங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகி கார் வாங்கிய செய்தியானது அவர் உடனிருந்த அதிகாரி ஒருவர் வெளியிடவே, இச்செய்தியானது பிரதமர் மோடியிடம் சென்று அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |