Categories
உலக செய்திகள்

அதிகரித்த துப்பாக்கி கலாச்சாரம்…. 2 போலீஸ் சுட்டுக் கொலை…!!

அமெரிக்காவின் 2 போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் சில வருடங்களாகவே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரை குறிவைத்து சுடும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. இந்த துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்களும் வலுப்பெற்று வருகின்றன. துப்பாக்கி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ட்ரம்ப் தலைமையிலான அரசு இதைத்தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது. இதனால் மேலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணம் மெக்கா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 11ம் தேதி இரவு மெக்கா நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்தது. இதனைத்தொடர்ந்து எடெல்மிரோ கார்சா மற்றும் இஸ்மாயில் சாவேஸ் இரு போலீஸ் அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டின் வாசலில் ஒரு வாலிபர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார் மேலும் வீட்டிலிருந்த நபர்களை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி  கொண்டிருந்தார். போலீஸ் அதிகாரிகள் இருவரும் அந்த வாலிபரிடம் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு எச்சரித்தனர். அவர்கள் கூறியதை கேட்காத வாலிபர் அதற்கு மாறாக போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தால் போலீஸ் அதிகாரிகள் இருவரின் உடல்களிலும் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தன.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். தகவலினால் உடனடியாக கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ரத்தவெள்ளத்தில் கிடந்த போலீஸ் அதிகாரிகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். போலீஸ் அதிகாரிகளை சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த நபர் மெக்காலே நகரை சேர்ந்த ஆல் டன் காரம் இல்லை என்பதும் அவர் குற்றப் பின்னணி கொண்டவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |