பப்ஜி செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்த ஆன்லைன் விளையாட்டின் மூலம் இளைஞர்களின் உடல் நலம், மனநலம் இரண்டும் பாதிக்கப்படுவதாகவும், மேலும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கருதி தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என கூறியுள்ளார்.
இந்தியா-சீனா இருநாட்டு எல்லை மோதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த ஜூன் 29ஆம் தேதி மத்திய அரசு தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.