Categories
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதியாக காமெடி நடிகர்….!!

உக்ரைனில் நடைபெற்ற  ஜனாதிபதி தேர்தலில் பிரபல காமெடி நடிகர் ஒருவர்  அதிகமான  வாக்குகள் பெற்று முதன்மையாக  உள்ளதால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது. 

உக்ரைன் நாட்டில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று  ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் அரசியலில் அனுபவம் துளியும் இல்லாத அந்நாட்டின்  காமெடி நடிகரான 41 வயதுடைய  வோலோடிமிர் ஷெலன்ஸ்கியும், அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பெட்ரோ போரோச்ஷென்கோவும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து முதல் கட்ட வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பிரதமராக உள்ள பெட்ரோ போரோச்ஷென்கோ 17 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் அவரை தொடர்ந்து காமெடி நடிகரான வோலோடிமிர் ஷெலன்ஸ்கி  30 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் வகித்துள்ளார்.

Image result for Comedy actor Vladimir Selenski

இதனையடுத்து 2ம்  கட்ட வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதிலும்  காமெடி நடிகரான ஷெலன்ஸ்கியே  முன்னிலை வகிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்பின் படி அவர் மொத்தம் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றால் உக்ரைன் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |