அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்த தற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அல்லு அர்ஜுன். இவர் அடுத்ததாக சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தில் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். இப்படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் உருவாக்கப்பட உள்ளது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இப்படத்திலிருந்து காரணங்கள் ஏதும் வெளியிடாமல் திடீரென விலகினார். இந்த நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் “கால்ஷீட் பிரச்சனை காரணமாக புஷ்பா படத்திலிருந்து விலகியதாக” தெரிவித்துள்ளார். மேலும் புஷ்பா படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என விஜய்சேதுபதி கூறியுள்ளார்.