Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்…துணிச்சல் பிறக்கும்…!

மேஷ ராசி அன்பர்களே …!  இன்று தொலைபேசி வழி செய்தி சிந்திக்க வைக்கும் நாளாக இருக்கும். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தெளிவு பிறக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். மனதில் தைரியம் இருக்கும். துணிச்சலுடன் சில காரியங்களை எதிர் கொள்வீர்கள். இன்று மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |