Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…மரியாதை கூடும்…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்படையும் நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் தொல்லை கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் குழப்பம் பணத்தட்டுப்பாடு போன்றவை ஏற்படலாம். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. குடும்பத்தில் பல ஆறுதலான விஷயங்கள் நடக்கும்.

எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் ஏதும் இருக்காது. தொழில் போட்டிகள் ஏதும் இருக்காது, எதுவும் லாபம் ஆகவே உங்களுக்கு இன்று இருக்கும். மனதிற்குப் பிடித்த படி ருசியான உணவுகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப நல்ல படியாகவே நடந்தும் முடியும். அதுமட்டுமில்லாமல் புதியதாக தேவைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடனும் கையில் வந்து சேரும்.

காதலர்களுக்கும் இனிமையான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களும் சிறப்பான சூழ்நிலையை ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது  ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |