Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…வீண் அலைச்சல் ஏற்படும்…மகிழ்ச்சி உண்டாகும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!  இன்று பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆகும். கனவு பலிக்கும். காலை நேரத்திலேயே மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். தொழில் வியாபாரத்தில் நண்பருடன் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.

மனதில் அவ்வப்போது ஏதாவது கவலை மட்டும் இருந்து கொண்டே இருக்கும். தயவுசெய்து எதை பற்றியும் கவலை கொள்ளாதீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.  மனதை எப்போதுமே அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மனச் சோர்வை நீக்கி கொள்ளலாம். மனம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |