மகர ராசி அன்பர்களே …! இன்று இதமாகப் பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். தொழில் நலன் கருதி முக்கிய முடிவு எடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்ற சிந்தனையில் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பெரும் லாபம் தடைபடாமல் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்திற்கு தடை தாமதம் வந்தாலும் அவை சிறப்பாகவே உங்களுக்கு வந்து சேரும்.
வியாபாரம் திட்டமிட்டபடி விரிவாக்கம் செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும். புதிய முயற்சிகளில் மட்டும் இப்போதைக்கு தலையிடவேண்டாம். புதிய பொறுப்புகளையும் இப்போதைக்கு ஏதும் ஏற்க வேண்டாம். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். சரியான உணவு வகைகளை மட்டும் எடுத்து உண்ணுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.