Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…வேலைச்சுமை அதிகரிக்கும்…எதிலும் நிதானம் தேவை…!

கும்ப ராசி அன்பர்களே …!  இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்பு பணம் கொஞ்சம் கரையும். சீரான உடல் நிலை மீண்டும் தொல்லையை கொடுக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வேலைச்சுமை கூடுதலாகவே இருக்கும். கவலை இருந்து கொண்டே தான் இருக்கும்.  குறைந்த வருவாய் கிடைக்கும். இன்று செய்யும் காரியங்களில் நல்லது கெட்டதை பற்றி தீவிரமாக ஆராய்ந்து செயல்படுங்கள். சில விஷயங்களில் தடுமாற்றம் இருக்கும்.

சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்தியோக நிமித்தமாக வெளியூர் சென்று தங்க நேரிடும். வெளியூர் விவகாரத்தில் எப்பொழுதுமே கவனமாக இருங்கள். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால் போதுமானது. தானுண்டு தன்வேலையுண்டு என்று இருப்பது ரொம்ப நல்லது. அடிக்கடி கோபமாக பேச நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். சுய நினைவில் எப்பொழுதுமே அக்கறை கொள்ளுங்கள். பேச்சில் நிதானம் இருந்தால் எல்லாமே உங்களுக்கு சரியாகும். திடீர் மாற்றங்களும் நிகழும்.

காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதே போல உணவு விஷயத்தில் கண்டிப்பாக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |