Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டாயத்துக்காக எல்லாம் நடிக்க முடியாது – ஸ்ரேயா ரெட்டி அதிரடி ட்விட்…!!

கதாபாத்திரத்திற்கு நான் பொருந்தினால் மட்டுமே நடிப்பேன் வேறு எந்த கட்டாயத்திற்காகவும் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஷ்ரேயா ரெட்டி அதிரடியாக டுவீட் செய்துள்ளார்.

விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக தனது நடிப்பால் அசத்தியவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பின் வசந்தபாலன் இயக்கிய வெயில், தங்கர்பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இவர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் ஸ்ரேயா நடித்துள்ள படம் அண்டாவ காணோம். வேல்மதி இயக்கிய இப்படம் ரிலீஸ் செய்வதில் சிக்கலாகி  சில ஆண்டுகளாக முடங்கி இருந்தது . இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் திட்டமிட்டிருந்தார் .

இந்த நிலையில் அண்டாவ காணோம் படத்தை பற்றி டுவீட் செய்துள்ள ஸ்ரேயா , “அண்டாவ காணோம் எப்போது ரிலீஸ் ஆனாலும் அது நிச்சயமாக காத்திருப்பதன் பலனாக அமையும். இந்த படத்தின் கதை அபாரமானது. அந்த கதையை நாங்கள் எப்படி உணர்ந்தோமோ அப்படியே படத்தில் பிரதிபலித்துள்ளது என நாங்கள் நம்புகிறோம். நான் ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என பலரும் கேட்டு வருகின்றனர் . சும்மா கட்டாயத்திற்காக மட்டும் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது. அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் நடித்தால் பொருந்தும் என்று உண்மையில் நம்பினால் மட்டுமே நான் அதில் கட்டாயம் நடிப்பேன், என ஸ்ரேயா ரெட்டி கூறியுள்ளார்.

Categories

Tech |