பல இதயங்கள் சேர்ந்து உருவாக்கிய இத்திரைப்படத்தில் சுஷாந்தின் நினைவுகளும் உள்ளது என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் முகேஷ் சாப்ரா தற்போது இயக்கியுள்ள தில் பெச்சாரா படத்தில் நடிகர் சுஷாந்த மற்றும் நடிகை சஞ்சனா சங்கி நடித்திருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை செய்வதற்கு முன் இப்படம் எடுக்கப்பட்டது. இப்படமானது ஸ்டார்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை தழுவியே எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து வருகின்ற 24ஆம் தேதி OTT தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது கருத்துக்களை கூறும் போது, முகேஷ் சோப்ராவுடன் சேர்ந்து பணிபுரிந்தது தனக்கு மிகப் பெரிய அனுபவம் என்றும் அது தனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளார். மேலும் பல இதயங்கள் ஒன்று கூடிய இத்திரைப்படம் மிகவும் கவனிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சுஷாந்த்-தின் நினைவுகள் இப்படத்தில் அதிகம் உள்ளது எனவும் கூறினார்.
அதுமட்டுமன்றி இந்தியாவின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களால் இப்படத்தின் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யாவுடன் காதல் பாடல்களில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இத்தகைய ஆல்பம் அனைவருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன் என்று தனது கருத்தை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இசை அமைப்பில் எத்தகைய விதிமுறைகளும் இல்லை என்றும் அது இதயம் சார்ந்தது என்றும் அவர் கூறினார். இத்தகைய பாடல்களை சிறிது நேரம் நான் வாசித்த பிறகு தான் இயக்குனரிடம் காண்பிப்பேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.