சென்னை கானாத்தூர் உத்தண்டியில் வசித்துவரும் தொழிலதிபர் ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜூலை 10ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில் “எனது 13 வயதுடைய மகள் நாவலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். அவர் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாவார்..
அதனால் அவரது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த 42 வயதுடைய மகேஷ் எனும் பயிற்சியாளரை நியமித்தேன். அவர் தினமும் வீட்டுக்கு வந்து பயிற்சியளித்து வந்தார்.. இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி அவர் எனது மகளுக்கு உடற்பயிற்சியளிக்கும்போது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
என்னுடைய மகள் சத்தம் போடவே அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். எனவே அவரை விரைந்து கைது செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டார். இந்தசம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த மகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் இன்று கைதுசெய்தனர்.