Categories
சினிமா

உழைப்பு மட்டுமே பெரிதானால்…. “உன்னைப்போல் எவரும் இல்லை” விஜய்சேதுபதிக்கு கிடைத்த பாராட்டு…!!

உழைப்பு மட்டும் தான் பெரிது எனக் கருதினால் விஜய்சேதுபதியை போல் எவருமில்லை என இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கால நிலையில் இணையம் தான் எல்லாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் டுவிட்டர் கணக்கில் நடிகர் சிவகார்த்திகேயனின் டுவிட்டர் கணக்கை 60 லட்சத்திற்கு மேலான ரசிகர்களின் பின்தொடர்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியை 10 லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர்கின்றனர். இதைப்பற்றி சிவகார்த்திகேயன் பல்வேறு கருத்துக்களை கூறும் போது, அளவற்ற அன்பு காட்டி ஆதரவு செலுத்தும் 60 லட்சம் சகோதர சகோதரிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கோகுல் விஜய் சேதுபதிக்கு பாராட்டு கூறும் போது, சுமார் மூஞ்சி குமார் குமுதாவை பின்தொடர்ந்தார். தற்போது அனைவரும் மக்கள் செல்வன் ஆன விஜய் சேதுபதியை பின் தொடர்ந்துள்ளனர். உழைப்பு மட்டுமே பெரிதாக கருதினால், பின்தொடர உன்னைப்போல் “எவருமில்லை” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |