தமிழக முதல்வர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கின்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது ? அதே போன்று பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் என பல அம்சங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன ? என்பது தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மருத்துவதுறையில் தமிழக மருத்துவ மாணவர்களுக்கான 10 சதவீதம் உள் ஒதுக்கீடு தொடர்பாகவும் பேச வாய்ப்புள்ளது. இது தொடர்பான திருத்தங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இன்று நடைபெறக்கூடிய அமைச்சரவை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.