Categories
அரசியல்

நம்முடைய எதிரி யார் தெரியுமா ? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் …!!

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது திருச்சியில் 45 ஆயிரம் கொரோனா சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சோதனையை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றோம். திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கக் கூடிய மருந்துகள் எல்லாம் தேவையான அளவுக்கு இருக்கின்றது. அதனால் பல உயிர்களை காப்பாற்றக் கூடிய நிலை இருக்கிறது. பொது மக்களுக்கு நோய் குறித்த பதட்டமும்,  பீதியும் தேவை இல்லை. அதே நேரத்தில் நாம் மிகுந்த கவனத்தோடும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் முக கவசத்தை தொடர்ந்து அணிந்து ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  அரசு எடுத்து வருகின்றது. நோயாளிகள் நமக்கு எதிரிகள் எதிரிகள் அல்ல… கொரோனா வைரஸ் தான் நமக்கு எதிரி…. நோயாளிகளை நாம் அன்போடும், பாசத்தோடும் அணுக வேண்டும்.  ஆபத்தான நிலையில் வரக்கூடிய நோயாளியை கூட நம்முடைய அரசாங்க மருத்துவமனையை கரம் பிடித்து, அவளை தாங்கி பிடித்து உயிர் காக்கக் கூடிய பணியை செய்கிறார்கள் என்று அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Categories

Tech |