திருடன் போலீஸ் விளையாட வராத தம்பியை அண்ணனே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவை சேர்ந்த பிரைடென் என்ற சிறுவன் தனது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தான். அச்சமயம் திடீரென பிரைடெனின் தம்பி அண்ணன் பேச்சை கேட்காமல் யூடியூபில் வீடியோ பார்ப்பதற்கு சென்றுவிட்டான். இதனால் கோபம் கொண்ட பிரைடென் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து தம்பியின் பின்மண்டையில் சுட்டு விட்டான். இதனால் ரத்த வெள்ளத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த தம்பி சரியா பிரைடென் அவசர உதவியை அழைத்துள்ளார். ஆனால் உதவிக் குழு சம்பவ இடத்திற்கு வரும் முன்பாகவே பிரைடெனின் தம்பி மரணமடைந்தான்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பிரைடெனை கைது செய்ததோடு அவனை சிறுவனாக நினைக்காமல் பெரியவர்களிடம் விசாரிப்பது போல் விசாரித்துள்ளனர். காரணம் தான் எடுத்து வந்த துப்பாக்கி நிஜமானது என்று தனக்குத் தெரியும் என்றும் அதில் தோட்டாக்கள் இருந்ததும் தனக்கு தெரியும் என்றும் பிரைடென் கூறியுள்ளான். குடும்பத்தினர் ஒரே நேரத்தில் இரண்டு மகன்களை பறிகொடுத்த நிலையில் அவர்களது 3 பெண் குழந்தைகளுக்கும் மனோதத்துவ நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகின்றது.