முக கவசம் அணிய வலியுறுத்தியவரின் மகளை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஏலமண்டலா என்பவர் தனது குடும்பத்தினருடன் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த அன்னப்பு ரெட்டி என்பவர் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் அவரை கண்டித்து முக கவசம் அணிவதற்கு அறிவுறுத்தியுள்ளனர். சில தினங்களுக்கு பிறகு மீண்டும் ஏலமண்டல மற்றும் குடும்பத்தினர் சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது அன்னப்பு ரெட்டி முகக்கவசம் அணியாத தை பார்த்த அவர்கள் மீண்டும் அறிவுரை கூறியுள்ளனர்.
இதில் கோபமடைந்த அன்னப்பு ரெட்டி தனது நண்பர்கள் 4 பேரை வரவழைத்து ஏலமண்டலா, அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரையும் கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் அவரது மகள் பாத்திமாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க அதனடிப்படையில்அன்னப்பு மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.