நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டு நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. முறையாக சமூக விலகலை கடைபிடித்து நாம் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை , நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. பேங்க் தொடர்பான சேவையும் முறையான பொருளாதார நடவடிக்கைகளை கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது.
அந்தவகையில், வங்கிகளுக்கு முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் டோக்கன் முறையை அமல்படுத்த வேண்டும். 5 பேருக்கு மேல் உள்ளே அனுமதி கிடையாது. வயதானவர்களுக்கு ஓய்வூதியத்தை வீட்டிலேயே சென்று வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 20,000_க்கு கீழ் பணம் எடுப்பவர்கள் ஏடிஎம் பயன்படுத்த கூறப்பட்டுள்ளது.