Categories
உலக செய்திகள் கொரோனா

” நாங்கதான் BEST ” அதிக கொரோனா பரிசோதனை செய்கிறோம் – ட்ரம்ப் அறிக்கை …!!!

நாங்கள் மற்ற நாடுகளை விட அதிகமாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது வரை 34 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,37,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால்உயிரிழந்துள்ளனர். சென்ற ஒருவாரமாக 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பற்றி  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில் :- ” ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா  சோதனைத் திட்டம் உள்ளது. அமெரிக்கா மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது மற்ற நாட்டை விட எங்கள் நாட்டில் சோதனை திட்டம் சற்று விரிவானது. நாங்கள் இதுவரை 4.5 கோடி சோதனைகளை நடத்தி இருக்கிறோம்.

நாங்களும் சிறந்த  கொரோனா தடுப்பூசிகளை  உருவாக்கி, சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறோம். விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரும் என்று நான் நினைக்கிறேன். சீனா நாடு உலகிற்கு என்ன செய்துள்ளது. அந்த நாடு உலகத்திற்கு செய்த கொடுமையை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா வைரஸை சீனா பிளேக், சீனா வைரஸ் என அழைக்கலாம். அதற்கு சுமார் 20 மறு பெயர்கள் இருக்கின்றன. மேலும் இந்த வருட தொடக்கத்தில் கையெழுத்திட்ட சீன வர்த்தக ஒப்பந்தம் அதே நிலையில் உள்ளது “, எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |