தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஒரு அறிக்கையானது தமிழக அரசால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் 105 பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று வரை தமிழகம் முழுவதும் 15லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல நேற்றைய தினம் முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும், முதலமைச்சருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.
அதே போல முதலமைச்சர் அலுவலகத்தில் எவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது என அந்த செய்தி குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அமைச்சர் 3 பேருக்கு கொரோனா ஊர்தியாகியுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்வதற்கு முன்னதாக முதலமைச்சர் பங்கேற்ற பல நிகழ்வுகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.