Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் : சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால் துறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பந்தமாக சிபிசிஐடி போலீ சாரால் சுமார் 10 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த மனுவை 13-ம் தேதிக்கு மாற்றி மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன்  அமர்வில் நேற்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

இதில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் இருந்து ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டதால் வழக்கு நாளை ( இன்று ) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை  உடல் நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரும் தற்போது ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Categories

Tech |